இதையும் குடிச்சிட்டு ஓட்டாத.. சொகுசு கார் வாங்கிய பிக் பாஸ் பாலாஜி முருகதாஸுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக வருபவர்கள் புகழின் உச்சிக்கே எளிதில் சென்றுவிடுவார்கள்.
பாலாஜி முருகதாஸ்
அதற்கு பிறகு அவர்களுக்கு சினிமா வாய்ப்புகளும் அதிகம் வரும். ஓவியா, ஆரி, ராஜு என பல பிரபலங்கள் பிக் பாஸ் மூலமாக நல்ல புகழை சம்பாதித்து இருக்கின்றனர்.
அந்த வரிசையில் பிக் பாஸ் 4ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு இரண்டாம் இடம் பிடித்தவர் பாலாஜி முருகதாஸ். மாடலிங் துறையில் இருந்த அவர் பிக் பாஸ் வந்தபிறகு அதிகம் பாப்புலர் ஆனார்.
பிக் பாஸ் தொடர்ந்து பிக் பாஸ் அல்டிமேட் ஷோவில் அவர் போட்டியாளராக கலந்துகொண்டார். அதில் அவர் டைட்டில் ஜெயித்தது குறிப்பிடத்தக்கது.

புது கார்
இந்நிலையில் தற்போது பாலாஜி முருகதாஸ் ஒரு புது சொகுசு கார் வாங்கி இருக்கிறார். அதன் விலை ஒரு கோடி ருபாய் என சொல்லப்படுகிறது.
அதன் புகைப்படங்களையும் பாலாஜி முருகதாஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அவருக்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
குடிச்சிட்டு ஓட்டாத
பாலாஜி முருகதாஸ் இதற்கு முன் குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தினார் என சர்ச்சை ஏற்பட்டது உங்கள் எல்லோருக்கும் நினைவிருக்கும். இந்த காரில் அப்படி குடித்துவிட்டு ஓட்டாதே என நெட்டிசன்கள் அவருக்கு அட்வைஸ் கூறிவருகின்றனர்.