தூங்கிய குழந்தையை அடித்து எழுப்பிய 60 வயதான நடிகர்! வைரலாகும் வீடியோ..

Viral Video Trending Videos Nandamuri Balakrishna
By Edward Jun 03, 2022 10:07 AM GMT
Report

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராகவும் மூத்த கலைஞராகவும் திகழ்ந்து வருபவர் நந்தமுரி பாலக்கிருஷ்ணா. அவர் நடிப்பில் சமீபத்தில் அகண்டா படம் வெளியாகி மக்கள் மனதை ஈர்த்து வசூலிலும் பட்டையை கிளப்பியது.

தற்போது தெலுங்கு தேசம் கட்சியின் எம் எல் ஏ-வாகவும் பணியாற்றி வரும் பாலய்யா, சமீபத்தில் தன் கருத்துக்கள் மற்றும் செய்கையாலும் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறார். அப்படி சமீபத்தில் ரசிகர் ஒருவர் குழந்தையுடன் போட்டோ எடுக்க வந்துள்ளார்.

தூக்கத்திலிருந்த குழந்தையை அடித்து எழுப்பி போட்டோவுக்கு போஸ் கொடுக்க வைத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் ஒரு குழந்தையை இப்படியா அடித்து போஸ் கொடுக்க வற்புறுத்துவது என்று கலாய்த்தும் கண்டனங்களை தெரிவித்தும் வருகிறார்கள்.