கோவில்ல பலூன் விற்ற பெண்! ஒரே இரவில் மாடலாகிய இளம்பெண் கிஸ்பு!

kerala model kisbu balloonseller
By Edward Mar 09, 2022 05:50 PM GMT
Report

ஒரு தகவலை பரிமாறிக்கொள்ளவே அந்த காலத்தில் பல மாதமாக காத்திருந்து தான் பெற்றுக்கொண்டார்கள். ஆனால் தற்போது அதிநவீன காலக்கட்டத்தில் சமுகவலைத்தளங்கள் மூலம் பல்வேறு செய்திகள் பகிர்ந்து வைரலாகியும் வருகிறது. பள்ளி முதல் ஆரம்பித்து அனைத்து துறையிலும் சோசியல் மீடியாவின் உதவி பெரிய விஷயமாக கருத்தப்பட்டு வருகிறது.

தற்போது இளைஞர்கள் முழுக்க முழுக்க இணையத்திலேயே அடிமையாகி இருக்கிறார்கள். இது ஒரு புறம் இருக்க குஜராத்தில் கூலித்தொழிலாளியை வைத்து தொழிலதிபர் போல் போட்டோஷூட் எடுத்து அவரை ஒரு மாடலாக்கிய தகவல் பெரியளவில் பேசப்பட்டது. அதேபோல் தற்போது கேரளாவின் பலூன் விற்பனை செய்த இளம் பெண்ணிற்கு நடந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் கேரள மாநிலம் ஆண்டலூர் காவு திருவிழாவிற்கு அர்ஜுன் கிருஷ்ணன் என்ற புகைப்படக் கலைஞர் அங்கிருந்த பலூன் விற்ற இளம் பெண்ணை போட்டோ எடுத்து அதை சமுகவலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். அப்புகைப்படம் பல லைக்ஸ்களை பெற்று பகிரப்பட்டது.

இதனால் அருஜுன் மாடலாக்க முயற்சி செய்துள்ளார். அதற்காக அப்பெண்ணின் பெற்றோர்களை சந்தித்து சம்மதம் வாங்கியிருக்கிறார். அலங்காரம் செய்து அவரை ஒரு மாடலாக்கி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்து வருகிறது.