பாலு மகேந்திராவின் மகள் சக்திக்கு என்ன ஆச்சு!! அழுதபடி வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி..
பாலு மகேந்திரா
தமிழ் சினிமாவில் 80-களில் லிஜெண்ட் இயக்குனராக திகழ்ந்தவர்களில் ஒருவர் பாலு மகேந்திரா. 1963ல் அகிலேஷ்வரி என்பவரை திருமணம் செய்த பாலு மகேந்திரா ஷோபாவிடம் ரகசியமாக உறவில் இருந்தார். இதன்பின் அகிலேஷ்வரி பாலு மகேந்திராவை விவாகரத்து செய்து பிரிந்தார். அதன்பின் 1978ல் ஷோபாவை திருமணம் செய்தார்.

திருமணமான இரண்டு வருடத்தில் ஷோபா தற்கொலை செய்து மறைந்தார். 18 ஆண்டுகள் தனியாக இருந்த பாலு மகேந்திரா 1998ல் மவுனிக்காவை திருமணம் செய்து கொண்டார். 2014ல் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.
மகள் சக்தி மகேந்திரா
பாலு மகேந்திரா தத்தெடுத்த வளர்த்த மகள் சக்தி மகேந்திரா, ஒருசில படங்களில் நடித்தும் இருக்கிறார். கடாவர் படத்திலும் வேலை செய்திருக்கும் சக்தி, இணையத்தில் ஆக்டிவாக இருந்து சில புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், மகளிர் தினத்தை முன்னிட்டு, கண்கலங்கியபடி எடுத்த வீடியோவை பகிர்ந்துள்ளார். சக்தி வீடியோவை பார்த்த ரசிகர்கள் என்ன ஆச்சு என்ற கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.