தூக்கத்திலேயே போன உயிர்!! பாரதி கண்ணம்மா விஜயலட்சுயின் இறப்பு காரணம் இதுதான்..
ஸ்டார் விஜய் தொலைக்காட்சி சேனலில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்த சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலின் இரண்டாம் பாகம் சமீபத்தில் தான் நிறைவு பெற்றது. ஆரம்பத்தில் முதல் பாகத்தில் கண்ணம்மாவின் பாட்டியாக நடித்து வந்தவர் பழம் பெரும் நடிகை விஜயலட்சுமி.
ரஜினி, கமல் உள்ளிட்ட பல நடிகர்களின் படங்களில் நடித்து வந்த விஜயலட்சுமி சீரியல் பக்கம் சென்று நடித்து வந்தார்.50க்கும் மேற்பட்ட சீர்யலில் நடித்துள்ள விஜயலட்சுமி 70 வயது ஆன நிலையில் சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.
சில நாட்களுக்கு முன் பாத்ரூமில் வழுக்கி விழுந்ததால் பலமான அடி ஏற்பட்டிருந்ததாம். அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சில தினங்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். அவருக்கு சாகும் வரை நடிக்க வேண்டும் என்பது தான் ஆசையாக இருந்ததாக அவரே கூறியிருந்தார்.
இந்நிலையில் அவரின் மரணம் குறித்து சில தகவல்களை மகள் கிரண் பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார். அம்மாவுக்கு நடிக்கனும் ஆசை ரொம்பவே இருந்ததாகவும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு பின் வாய்ப்புகள் வந்ததாகவும் உடல்நிலை சரியில்லாததால் நடிக்க முடியாமல் போனதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் சுகர் பிரச்சனையும் இருந்ததால் மாத்திரை எடுத்துக்கொண்டு வந்தார். நேற்று காலையில் தூக்கத்திலேயே உயிர் போனது. யாருக்கும் தொந்தரவு தரக்கூடாது என்று அவர் கூறியதை போலவே அதேமாதிரி எங்களை விட்டு சென்றுவிட்டார் என்று மன வேதனையுடம் தெரிவித்துள்ளார் கிரண்.