தனுஷுடன் அப்படியொரு ரோல்!! திட்டிய செல்வராகவனால் விலகி பிரபல நடிகர்..

Dhanush Selvaraghavan Gossip Today
By Edward Jun 19, 2024 08:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் மாபெரும் நடிகராக தன்னை உருவாக்கி மிகப்பெரிய அந்தஸ்த்தை பெற்றுள்ளவர் தான் நடிகர் தனுஷ். நல்ல கதைகளில் நடித்து, பாலிவுட், ஹாலிவுட் வரை சென்று தன் திறமையை நிரூபித்து வருகிறார் தனுஷ். இப்படியொரு இடத்தினை அவர் பிடிக்க காரணமாக இருந்தது அவரது அண்ணன் செல்வராகவன் தான். தனுஷை துள்ளுவதோ இளமை படத்திற்கு பின் காதல் கொண்டேன் படத்தில் வித்தியாசமனா ரோலில் நடிக்க வைத்தார் செல்வராகவன்.

தனுஷுடன் அப்படியொரு ரோல்!! திட்டிய செல்வராகவனால் விலகி பிரபல நடிகர்.. | Bava Lakshmanan Talk About Dhanush Selvaraghavan

சமீபத்தில் நடிகர் பாவா லட்சுமணன் அளித்த பேட்டியொன்றில் செல்வராகவன் பற்றிய சில தகவலை பகிர்ந்துள்ளார். செல்வராகவன் இயக்கி தனுஷ் நடித்த புதுப்பேட்டை படத்தில் முக்கிய ரோலில் முதலில் பாவா லட்சுமணன் நடித்திருந்தாராம். கதைப்படி தனுஷின் அப்பாவுக்கு நண்பராக வருவாராம் பாவா லட்சுமணன்.

அப்போது தனுஷ் வீட்டிற்கு அடிக்கடி அவர் அப்பாவுடன் இணைந்து குடிக்க வருவாராம். அப்படி வரும் போது தனுஷின் அம்மாவை சைட் அடிப்பது, ஆம்லெட் போட சொல்வது மாதிரியான ரோலில் நடித்திருக்கிறார். சொல்லப்போனால் தனுஷி பாவா லட்சுமணனால் தான் ரவுடியாக மாறுவாராம்.

தனுஷுடன் அப்படியொரு ரோல்!! திட்டிய செல்வராகவனால் விலகி பிரபல நடிகர்.. | Bava Lakshmanan Talk About Dhanush Selvaraghavan

ஆனால் இப்போது அந்த காட்சிகள் இடம்பெறவில்லை. 20 நாட்கள் பாவா லட்சுமணன் நடித்த காட்சியை பார்த்த செல்வராகவனுக்கு சுத்தமாக பிடிக்காததால் மானிட்டரில் பார்க்கும் போதே கத்திவிட்டாராம்.

இவனை எல்லாம் யார் நடிக்க கூப்பிட்டு வந்தா என்று கத்தி திட்டித்தீர்த்துவிட்டாராம். தனியாக என்னிடம் சொன்னால் ஒக்கே, அத்தனை பேர் முன்பு என்னை கெட்ட வார்த்தையில் திட்டிவிட்டார், அதனால் தான் அந்த படத்தில் நான் விலகிவிட்டேன் என்று பாவா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.