சமந்தாவுக்கு அப்படி நடக்க நீங்க தான் காரணம்!..மேடையில் தரம் தாழ்ந்த கேள்வியை கேட்ட பயில்வான்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் கடந்த ஆண்டு மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார்.
உடல்நிலை கொஞ்சம் தேறிய நிலையில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக குஷி படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் பிரஸ் மீட்டில் நடிகர் விஜய் தேவரகொண்டா பங்கேற்று உள்ளார். அப்போது பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் சமந்தாவுக்கு படத்திற்கு பின் மயோசிடிஸ் நோய் ஏற்பட்டதா இல்லை படத்திற்கு முன் ஏற்பட்டதாஎன்று விஜய் தேவரகொண்டாவிடம் கேட்டார்.
இதற்கு அவர், குஷி படத்தின் 60% ஷூட்டிங் முடிந்த பிறகு சமந்தாவுக்கு மயோசிடிஸ் நோய் ஏற்பட்டது என்று பதில் அளித்து கொண்டு இருந்தார்.
திடீரென பயில்வான் சமந்தாவுக்கு மயோசிடிஸ் நோய் ஏற்பட நீங்க தான் காரணம் என்று கூறினார். இதுக்கு விஜய் தேவரகொண்டா பதில் அளிக்காமல் அங்கு இருந்து சென்றார்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு ரசிகர்கள், பத்திரிகையாளர்கள் ஏன் எப்படி தரம் தாழ்ந்த கேள்விகளை கேட்கிறார்கள் என்று கமன்ட் செய்து வருகின்றனர்.
சமீபத்தில் பயில்வான் ரங்கநாதன் விவகாரத்து பின் சமந்தா புதிய காதலன் விஜய் தேவரக்கொண்டா இருக்கிறார் என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.