மகள்கள் அதிதி, ஐஸ்வர்யாவை நினைத்து நிம்மதி இழந்து தவிக்கும் சங்கர்.. அதிர்ச்சியளித்த பயில்வான்
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக திகழ்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் சங்கர். தற்போது ஒரே நேரத்தில் கமல் ஹாசனின் இந்தியன் 2 படத்தையும் ராம் சரணின் கேம் சேஞ்சர் படத்தினையும் இயக்கி வருகிறார். இரு படங்களில் பிரம்மாண்ட முறையில் எடுக்கப்பட்டு வெளியாகவுள்ளது.
ஐஸ்வர்யா - அதிதி
இந்நிலையில் தன் குடும்ப வாழ்க்கையில் சங்கர் தன்னுடைய இரு மகள்களால் நிம்மதி இல்லாமல் இருப்பதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார். மூத்த மகள் ஐஸ்வர்யா சங்கர் சில ஆண்டுகளுக்கு முன் தன்னைவிட பணக்கார குடும்பத்தில் மகளை திருமணம் செய்து வைத்தார்.
மகள் நன்றாக இருப்பாள் என்று நினைத்து பார்த்த சில மாதங்களில் பிரிந்துவிட்டனர். இவர்களின் விவாகரத்து வழக்கு நடந்து கொண்டு வருகிறார்.
அதேபோல் இரண்டாம் மகள் அதிதி சங்கர் டாக்டர் படத்தை முடித்தப்பின் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று அப்பாவிடம் அடம்பிடித்து விருமன் படத்தில் நடித்தார். அப்படம் வெற்றியை தொடர்ந்து மாவீரன் படத்தில் நடித்தார்.
நிம்மதி இல்லை
ஆனால் ஒப்பந்தம் ஆனதே சங்கருக்கு தெரியாது என்றும் சினிமா வேண்டாம் என்று எவ்வளவு சொல்லியும் அப்பா பேச்சை கேட்காமல் தானாக முடிவெடுத்து வருகிறாராம் அதிதி என்று பயில்வான் தெரிவித்துள்ளார். இப்படி இரு மகள்களை நினைத்து நிம்மதி இல்லாமல் தவித்து சினிமா நாட்டம் இல்லாமல் இருந்து வருகிறாராம் சங்கர்.