கோடியில் சொத்து வைத்து தம்பியை அம்போன்னு சாக விட்டுட்டீங்களே!! வடிவேலுவை வெளுத்து வாங்கிய பயில்வான்..
தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் வடிவேலுவின் உடன்பிறந்த சகோதரரான ஜெகதீசன் கல்லீரல் செயலிழந்ததன் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன் தினம் உயிரிழந்தார். 55 வயதான ஜெகதீசன் இறுதி சடங்கிற்கு வடிவேலு உட்பட குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கி அஞ்சலி செலுத்தினர்.
வடிவேலு மரணம் குறித்து பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் பேட்டியொன்றில் சில விசயங்களை பகிர்ந்துள்ளார். மக்களை சிரிக்க வைக்க என்ன வேண்டும் என்றாலும் செய்யும் வடிவேலுவை நான் பார்த்து இருக்கிறேன்.
ஆனால் தன் குடும்பத்தை வெளியுலகத்திற்கு காட்டியதில்லை என்றும் அவருடன் பிறந்தவர்கள் எத்தனை பேர் என்ற விவரமும் யாருக்கும் தெரியாது என்றும் தெரிவித்துள்ளார். மகன், மகள் திருமணத்தில் கூட எதுவும் சொல்லாத வடிவேலு ஒரு தம்பி இருப்பது, அவர் காதல் அழிவதில்லை என்ற படத்தில் நடித்திருப்பதும் தெரிவித்துள்ளார்.
அச்சு அசல் வடிவேலுவை போல் இருக்கும் தம்பி இரு படத்தில் நடித்துள்ள அவரை சினிமாவில் நடிகராக்கி இருக்கலாம். வேறு வழியின்றி ஜெகதீசன் ஜவுளி கடை நடத்தி வந்திருக்கிறார். தற்போது கல்லீரல் மாற்று சிகிச்சை என்பது சாதாரணமாகிவிட்டது.
உதயநிதி இடமோ அல்லது மா சுப்ரமணியனிடமுமோ உதவி கேட்டு இருந்தால் உதவி செய்திருப்பார்கள். ஏன் வடிவேலுவிற்கு கூட உதவ மனம் வரவில்லை.
சாகுற வயசா இது, கோடி கோடியா பணம் வைத்திருந்தும் தம்பியை இப்படி சாகவிட்டுவிட்டார் என்ற வேதனை இப்படி நான் கூறுகிறேன் என்று பயில்வான் ரங்கநாதன் வடிவேலு மீது குற்றம் சாட்டி பேட்டியளித்துள்ளார்.