தேவசேனாவுக்கு மணமேடைக்கு வாய்ப்பில்லை!! அனுஷ்கா திருமணம் குறித்து அதிர்ச்சி கொடுத்த பயில்வான்..
தமிழ் சினிமாவில் ரெண்டு என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை அனுஷ்கா செட்டி. தெலுங்கில் 2005ல் வெளியான சூப்பர் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகிய அனுஷ்கா செட்டி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார்.
முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்த அனுஷ்கா செட்டி இஞ்சி இடுப்பழகி என்ற படத்தின் உடல் எடையை அதிகரித்து ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறினார். அளவுக்கதிகமான உடல் எடையை அதிகரித்ததால் உடல் எடையை குறைக்க கஷ்டப்பட்டு வந்தார்.
இதனால் பல படவாய்ப்புகளை இழந்தும் 40 வயதை தாண்டியும் கஷ்டப்பட்டு வந்தார். இந்நிலையில், அனுஷ்கா செட்டி முயன்றளவிற்கு உடல் எடையை குறைத்த மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில், பிரபாஸ் உடன் நடித்து காதலித்த அனுஷ்கா, கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டார். அதற்கு காரணம் தொழிலதிபருடன் அனுஷ்கா தொடர்பில் இருந்தது தான் என்றும் திருமணம் வரை சென்று பின் பாதியிலேயே தடையானதால் சோகத்தில் அனுஷ்கா இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் உடல் எடையை ஏற்றியதாலும் உயரம் 6 அடிக்கும் மேல் இருப்பதாலும் மாப்பிள்ளை அவருக்கு கிடைப்பது சிக்கல் என்றும் தெரிவித்துள்ளார். அரியனையில் படத்தில் ஏறிய தேவசேனாவுக்கு திருமண மேடை இனிமேல் ஏறுவதற்கு வாய்ப்பில்லை என்றும் தெரிவித்து அதிர்ச்சி கொடுத்துள்ளார் பயில்வான்.
41 வயதாகியும் இன்னும் அனுஷ்கா திருமணம் செய்யாதிருப்பது பலருக்கு அதிர்ச்சியையும் குடும்பத்தினருக்கு ஏக்கத்தையும் தந்து வருகிறது.