பயில்வானை துரத்திதுரத்தி காதலித்த சேச்சி நடிகை! திருமணம் வரை சென்ற 3 நடிகைகள்..

Goundamani Gossip Today Bayilvan Ranganathan
By Edward Feb 13, 2023 11:39 AM GMT
Report

முன்னணி நடிகர்கள் நடிகைகளின் அந்தரங்க தகவல்களை பற்றி படுகேவலமாக பேசி சர்ச்சையை ஏற்படுத்தி வருபவர் பயில்வான் ரங்கநாதன். சமீபகாலமாக youtube சேனல்களுக்கு பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்தியத்தை பலர் கண்டித்து கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

நடிகைகளின் உறவுகளை பற்றி பேசிய பயில்வான், தன்னை காதலித்த நடிகைகள் பற்றி கூறியுள்ளார். ஷகிலா எடுத்த பேட்டியில், தன்னை 3 நடிகைகள் காதலித்ததாகவும் திருமணம் செய்ய கட்டாயப்படுத்தியதாகவும் கூறியுள்ளார் ஆனால் அதை ஏற்க மறுத்துவிட்டேன் எனவும் கவுண்டமணி உடன் பல படங்களில் நடித்த காமெடி நடிகை ஒருவர் காதலித்ததாகவும் திருமணம் செய்ய கேட்டதாக்கவும் கூறியுள்ளார்.

அவரின் காதலை ஏற்க மறுத்ததோடு எங்கள் குடும்பம் ஆச்சாரமானவர்கள், அப்படியொரு திருமணத்தை ஏற்கமாட்டார்கள் என்று கூறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். இப்போது அந்த நடிகை மோசமான நிலையில் இருந்து கஷ்டப்பட்டு வருகிறார் என்ற தகவலையும் கூறியிருக்கிறார். அந்த நடிகை யார் என்பதை கூறாமல் தவிர்த்து இருக்கிறார். அந்த நடிகை சார்மிளி என்பதை பலர் கூறி வருகிறார்கள்