திருமணமாகி 10 வருடமாகியும் குழந்தை பெற்றுக்கொள்ளாதது ஏன்!! பயில்வான் கொடுத்த ஷாக்..

Ram Charan Bayilvan Ranganathan
By Edward May 24, 2023 10:44 AM GMT
Report

சினிமாவை சேர்ந்த நட்சத்திரங்களின் அந்தரங்கம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி யூடியூப் சேனல்களில் பேசி சர்ச்சையை ஏற்படுத்தி வருபவர் பயில்வான் ரங்கநாதன். அவர் வெளியிடும் வீடியோவை அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சிப்பதை எதிர்த்து பலர் நேரடியாக சண்டைப்போட்டும் இருக்கிறார்கள்.

அப்படி நடிகை ராதிகா, ரேகா நாயர், கே ராஜன் உள்ளிட்டவர்கள் பயில்வானை கண்டித்து குரல் கொடுத்து வந்தனர். அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் யூடியூப்பில் பல விசயங்களை பேசி வருகிறார் பயில்வான்.

திருமணமாகி 10 வருடமாகியும் குழந்தை பெற்றுக்கொள்ளாதது ஏன்!! பயில்வான் கொடுத்த ஷாக்.. | Bayilvan Open Ram Charan Wife Pregnancy

தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரும் மெகா சூப்பர் ஸ்டார் மகன் ராம் சரணின் திருமண வாழ்க்கையை பற்றியும் மனைவி கருவுற்றது பற்றியும் பேசியிருக்கிறார். திருமணமாகி 10 ஆண்டுகளாக குழந்தை பெறாமல் இருந்து வருகிறார்கள் ராம் சரண் - உபாசனா.

ஆனால் 10 ஆண்டுகளுக்கு முன் கருமுட்டையை பாதுகாத்து வைத்து வந்ததாக உபாசனா தெரிவித்தார். தற்போது சேகரித்து வைத்த கருமுட்டையால் கர்ப்பமாகியிருக்கிறார் உபாசனா.

அப்படி கருமுட்டைகளை சேகரித்து கருத்தரிக்க என்ன காரணம், ராம் சரணுக்கு ஏதாவது பிரச்சனையா? குறைபாடா? இருக்குமோ என கூறியிருக்கிறார் பயில்வான்.

இவர்களை போல் பல நடிகைகளும் இப்படி செய்திருக்கிறார்கள். சமீபத்தில் நடிகை அபிராமி பல ஆண்டுகள் கழித்து குழந்தையை தத்தெடுத்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார் பயில்வான்.