சமந்தா, நயன்தாரா இப்படி ஆக, அந்த பழக்கம் தான் காரணமா? சர்ச்சையை ஏற்படுத்திய பயில்வான்
தென்னிந்திய சினிமாவில் நடிக்கும் நடிகைகள் மற்றும் நடிகர்களின் அந்தரங்கம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை, கிளாமர் போன்ற விசயங்களை பற்றி அவதூறாக பேசி சர்ச்சையாக பேசி வருகிறார் பயில்வான் ரங்கநாதன். நடிகராக பத்திரிக்கையாளராக இருந்து இப்படி நட்சத்திரங்களை பற்றி கேவலமாக விமர்சித்து வருவதை பலர் கண்டித்து பேசி வருகிறார்கள்.
ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் யூடியூப்பில் பேட்டிக்கொடுத்து பல விசயங்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்திய பேட்டியொன்றில், பெரும்பாலான நடிகைகள் கவர்ச்சியை மட்டும் காட்டாமல் நல்ல திறமையை காட்ட வேண்டும். அப்படியே நயன் தாராவை பாருங்கள். சில படங்களில் கவர்ச்சியாக நடித்து தற்போது அவருக்கு திறமை இருந்ததால் கதையின் நாயகியாக வளர்ந்திருக்கிறார்.
அப்போதெல்லாம் சாவித்திரி போன்றவர்கள் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கேற்ப மாறிவிடுவார்கள். 15 வருடங்களாக நடிகைகள் குத்தாட்டம் போட்டு வருகிறார்கள். நடிப்பின் மீது நம்பிக்கை போய், சதைமேல் தான் நம்பிக்கையை வைக்கிறார்கள் இப்போதைய நடிகைகள் என்றும் ஆபாசத்தை அப்படி ரசிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
சாவித்திரி, சரோஜா தேவி, தேவிகா போன்ற நடிகைகள் மஞ்சள் போன்ற இயற்கையான மேக்கப்பை பயன்படுத்தினார்கள். ஆனால் தற்போது உள்ள நடிகைகள் வெளிநாட்டு மேக்கப் பொருட்களை பயன்படுத்தி வருகிறார். ரசாயன மேக்கப்பை பயன்படுத்தினால் முக பாவனை எப்படி வரும்.
அப்படித்தான் சமந்தா, நயன் தாரா, ஆண்ட்ரியா போன்றவர்கள் இப்படியான ரசாயன மேக்கப்பை போட்டு முக பொழிவை இழந்துவிட்டார்கள் என்று பயில்வான் தெரிவித்துள்ளார்.