நடிகர்களின் ஆசைக்கு இணங்காத ஒரே நடிகை இவர் தான்.. புகழ்ந்து தள்ளிய பயில்வான்!

Bayilvan Ranganathan Tamil Actress Actress
By Dhiviyarajan Jul 04, 2023 10:10 AM GMT
Report

1995 -ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான ஆசை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் சுவலக்ஷ்மி.

இவர் அஜித், விஜய் எனப் பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்துள்ளார். இவர் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து இளசுகளின் கனவு கன்னியாகவும் வலம் வந்தார்.

சுவலக்ஷ்மி, "எந்த காரணத்துக்காகவும் என்னால் கவர்ச்சியாக நடிக்க முடியாது" என்று சொல்லி பல பட வாய்ப்புகளை நிராகரித்துள்ளார். மேலும் ரஜினி, கமல் போன்ற உச்ச நட்சத்திரம் படங்களில் நடித்தால் கவர்ச்சியான காட்சியோ அல்லது படத்தில் சில கட்டாயம் இருக்கும் என்று இவர்களுடன் நடிக்க மறுத்துவிட்டார்.

நடிகர்களுடன் கிசுகிசுப்பில் இருக்கும் நடிகைகளுக்கு மத்தியில் ஹீரோக்களுடன் எந்த ஒரு காதல் சர்ச்சையில் சிக்காத ஒரே நடிகை சுவலக்ஷ்மி தான் என்று பயில்வான் கூறியுள்ளார்.     

நடிகர்களின் ஆசைக்கு இணங்காத ஒரே நடிகை இவர் தான்.. புகழ்ந்து தள்ளிய பயில்வான்! | Bayilvan Ranganathan About Suvalakshmi