எந்த நடிகையையும் கேவலமாக பேசவில்லை.. மேடையில் இருப்பவர்களை வெறுப்பேற்றி பேசிய பயில்வான்..

Gossip Today Bayilvan Ranganathan
By Edward Aug 16, 2022 06:30 PM GMT
Report

சினிமா நட்சத்திரங்களை அவதூறாகவும் நடிகைகளை பற்றி அந்தரங்க வார்த்தைகளை பயன்படுத்தி பேசி வருவதாகவும் கூறி நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் மீது பலர் புகாரளித்து விமர்சித்து வருகிறார்கள்.

சமீபத்தில் கூட நடிகை ராதிகா சரத்குமாரை தொடர்ந்து இரவின் நிழல் படத்தின் நடிகை ரேகா நாயர் நடுரோட்டில் வைத்து பயில்வானை கண்டபடி திட்டியிருந்தார். இந்த செய்தி இணையத்தில் வைரலாக பேசப்பட்டது. இந்நிலையில் ப்ளூ சட்டை என்ற குறும்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பயில்வான் கலந்து கொண்டு பேசியுள்ளார்.

அதில், நான் யாரைப்பற்றியும் அவதூறாக பேசவில்லை என்றும் எத்தனை நடிகைகள் மோசமாக படம் எடுத்து வெளியிடுகிறார்கள். அதை தான் நான் பேசுகிறேன். சினிமா நல்லா இருக்கனும் என்று தான் நான் அப்படி பேசு வருகிறேன்.

நான் சட்டம் படித்தவன், சப் இன்ஸ்பெக்டாராக இருக்கும் போது எனக்கு தெரியும். யூடியூப் சேனலே நான் நடத்தவில்லை. நான் அவதூறாக பேசவில்லை, அப்படி பேசியிருந்தால் சட்டம் என்னை சும்மா விடுமா என்று கூறியுள்ளார்.