கார் ரேஸ்-ஐ அஜித் தூக்கி எறிய இதுதான் காரணம்!! உண்மையை உடைத்த பயில்வான்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித் தற்போது ஏகே 62 படத்தின் ஷூட்டிங்கிற்காக காத்துக்கொண்டிருக்கிறார். இதற்கிடையில் அஜித் பைக் பயணங்களை மேற்கொண்டு வந்தார்.

இப்படியிருக்கும் போது கடந்த சில நாட்களுக்கு முன் அஜித்குமாரின் தந்தை மரணமடைந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில் பிரபலங்கள் பற்றி பல மேடைகளிலும் பேட்டிகளிலும் சர்ச்சையாகவும் அவதூறாகவும் பேசி வரும் பயில்வான் அஜித் குமார் பைக் ரேஸ் செய்யாமல் அதை நிறுத்த காரணம் என்ன என்பதை சமீபத்திய நிகழ்ச்சியில் கூறியிருக்கிறார்.
ரேசர் என்ற படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன். சங்கங்களை குறை சொல்வதை நிறுத்துங்கள். சினிமா தொழிலை கற்றுக்கொள்வதைவிட எப்படி வெளியிடுவது என்று கற்றுக்கொண்டு படம் எடுங்கள் என்று கூறியிருக்கிறார்.

மேலும், அஜித்தாலே முடியல, பைக் ரேஸில் கலந்துக்கிறதுக்கு. 7 வருஷத்துக்கு முன்னாடி என்கிட்ட அஜித் புலம்பினார் என்றும் எனக்கு ஸ்பான்ஸ்சர் கிடைக்கல. அதற்கு முன்னாடி நிறைய பேசினார், ஒரு பைக் 1 கோடி ரூபாய் இருந்ததால் தான் அஜித் ரேஸ் செய்வதை நிறுத்தினார் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்