பாக்யராஜின் முக்கால்வாசி படங்கள் அப்படி தான் இருக்கும்! உண்மையை உடைத்த பிரபல நடிகர்..
தமிழ் சினிமாவில் ரகசியமாக வைத்திருந்த சில விஷயங்களை அதிரடியாக உடைத்து வருகிறார் பிரபல பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன். இணையதளங்கள் பெரும்பாலானோற்க்கு பேட்டி கொடுத்து வரும் பயில்வான் சமீபத்தில் இயக்குநர் பாக்யராஜ் பற்றிய செய்தி ஒன்றினை குறிப்பிட்டு பேசியுள்ளார்.
முந்தானை முடிச்சு படத்தின் டைட்டிலை தவிர பாக்யராஜின் முக்காள்வாசி படம் சர்ச்சையான டைட்டிலாகவே இருக்கும். சர்ச்சை பட டைட்டிலை கொண்டே வெற்றியை கொடுத்து வந்தார். 40 நாட்களில் 80 சதவீதம் படத்தினை வெளிபடப்பிடிப்பிலேயே எடுத்து வந்தார்கள் இயக்குநர்கள் பாக்யராஜ், பாரதிராஜா உள்ளிட்டவர்கள்.
அப்படியான ஏவிஎம் சரவணனிடம் சென்று சின்னவீடு கதையை சொன்னதும், இந்த டைட்டிலே வேண்டாம் பெயர் கெட்டுபோகிவிடும் என்று கூறிய பின் முதலில் முந்தானை முடிச்சு கதையை கூறி எடுத்துள்ளாராம் பாக்யராஜ். இதையடுத்து சின்னவீடு படத்தினை எடுத்தார்.