ஒரு நாளைக்கு 1 லட்சம் சம்பளம் வாங்கும் சீரியல் நடிகை.. யார் தெரியுமா
தமிழ் சினிமாவில் ஹீரோக்களின் சம்பளம் குறித்து அடிக்கடி பேச்சு எழும். ஆனால் தற்போது சின்னத்திரையில் அதிகம் சம்பளம் வாங்கி வரும் நடிகை குறித்து தகவல் பரவி வருகிறது.
சமீபத்தில் பிரபல சீரியல் நடிகர் நியாஸ் கான் கொடுத்த பேட்டி ஒன்றில், ஹீரோயின் சம்பளம் ஒரு நாளைக்கு ரூ. 1 லட்சம் என கூறியுள்ளாராம். இதுதான் இணையத்தில் காட்டுத்தீபோல் பரவி வருகிறது. அவர் சொன்னது நடிகை ஸ்வாதி கொண்டேவை தான் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மூன்று முடிச்சு.
இந்த சீரியலில் கதாநாயகனாக நியாஸ் கான் நடித்து வர, கதாநாயகியாக நடிகை ஸ்வாதி கொண்டே நடித்து வருகிறார். இதில் கதாநாயகியான ஸ்வாதி கொண்டே ஒரு நாளை ரூ. 1 லட்சம் சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த தகவல் பரவி வந்த நிலையில், இதுகுறித்து எந்த ஒரு தகவலோ அல்லது மறுப்போ நடிகை ஸ்வாதி கொண்டே தரப்பில் இருந்து வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், கயல் சீரியல் கதாநாயகியான சைத்ரா ரெட்டி ரூ. 45 ஆயிரம் முதல் ரூ. 60 ஆயிரம் வரை சம்பளம் வாங்கி வருகிறார் என்றும் கூறப்படுகிறது. அதே போல் எதிர்நீச்சல் சீரியல் மூலம் பிரபலமாகி, தற்போது அய்யனார் துணை சீரியலில் நடித்து வரும் நடிகை மதுமிதா ஒரு நாளைக்கு ரூ. 40 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் சம்பளம் வாங்கி வருகிறாராம்.
இந்த லிஸ்டில் அடுத்ததாக, பாக்கியலட்சுமி சீரியல் நடிகை சுசித்ரா ரூ. 35 ஆயிரம் சம்பளம் வாங்கி வருகிறார் என்றும், சிங்கப்பெண்ணே சீரியல் நாயகி மனிஷா மகேஷ் ரூ. 30 ஆயிரம் முதல் ரூ. 35 ஆயிரம் வரை சம்பளம் வாங்கி வருகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், இவை அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.