பிரியா பவானி சங்கர் ஆபாசம் காட்டவில்லை!! ருத்ரன் படத்தை விமர்சித்த பயில்வான்..
ராகவா லாரன்ஸ் நடிப்பில் தமிழ் புத்தாண்டு அன்று வெளியான படம் ருத்ரன். படம் வெளியாகி கலவையான விமர்னத்தை பெற்று வரும் நிலையில் பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் படத்தினை பற்றி விமர்சனம் செய்துள்ளார்.
ஐடி வேலையில் பார்க்கும் ராகவா லாரன்ஸ், ஜாலியான ஒரு பையன். அம்மா பூர்ணிமா அப்பா பாக்யராஜ். படம் சில இடங்களில் இயற்கையாகவும் சில இடங்களில் செயற்கையாகவும் இருக்கிறது என்றும் பாடல்கள் சூப்பர் ஆட்டம் சூப்பராக போட்டிருக்கிறார் ராகவா லாரன்ஸ்.
முதல் பாதி அருமை, இரண்டாம் பாதி அடிதடி பழிவாங்கல் என இருப்பதாஅக்வும் மரண காட்டத்தில் பைரசர் உதவியுடன் ஃபைட் செய்து பின்னிபெடலெடுத்துள்ளார் ராகவா லாரன்ஸ். நர்ஸாக வரும் நடிகை பிரியா பவானி சங்கர் ஆபாசம் காட்டாமல் நன்றாக நடித்திருக்கிறார்.
சரத்குமார் முரட்டு வில்லனாக நடித்து இன்னும் பல படங்களில் முரட்டு வில்லனாக வருவார் என்றும் இயக்குனர் கதிரேசன் கதையை புதுமையாக எடுத்திருக்கலாம் என்றும் கூறியிருக்கிறார் பயில்வான். படத்தை ஒரு தடவை பார்க்கலாம் என்றும் கொஞ்சம் வெறுப்பாக அருவ படமாக இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.