நயன்தாரா வாடகைத்தாய் குழந்தை பற்றிய உண்மையை அன்றே உடைத்த பயில்வான்..

Nayanthara Vignesh Shivan Bayilvan Ranganathan
By Edward Oct 11, 2022 03:56 AM GMT
Report

லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகை நயன்தாரா ஜுன் 9 ஆம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை 7 ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ஹனிமூன் ஷூட்டிங் என்று பிஸியாக இருந்து வந்த நயன், கணவருடன் ரொமான்ஸ் செய்த புகைப்படமும் வைரலானது.

நயன்தாரா வாடகைத்தாய் குழந்தை பற்றிய உண்மையை அன்றே உடைத்த பயில்வான்.. | Bayilvan Reveals Before Surrogacy Nayanthara

வாடகைத்தாய்

இந்நிலையில் நேற்று நயன் தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியினர் ரெட்டை குழந்தையை வாடகைத்தாய் மூலம் பெற்றுக்கொண்டதாக புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்தனர். இந்த செய்தி இணையத்தில் வைரலானதை தொடர்ந்து விதிமுறைகளை மீறி நயன் தாரா - விக்னேஷ் சிவன் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளனர் என்ற விமர்சனமும் எழுந்தது. படங்களில் நடிக்கவும் உடலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகவோ இருவரும் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

நயன்தாரா வாடகைத்தாய் குழந்தை பற்றிய உண்மையை அன்றே உடைத்த பயில்வான்.. | Bayilvan Reveals Before Surrogacy Nayanthara

பயில்வான் ரங்கநாதன்

இப்படி தான் நடக்கும் என்று பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் சில மாதங்களுக்கு முன்பே கூறியிருந்தார். திருமணமாகிய நயன் தாரா குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படுவதாகவும் அதைவிட சினிமாவில் ஆர்வம் கொண்டிருந்ததாலும் குழந்தை பெறாமல் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்திருக்கிறார்கள் என்று கூறியிருந்தார் பயில்வான். மேலும் சமீபத்தில் மருத்துவர்களின் கட்டுப்பாட்டில் நயன் தாரா இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

Gallery