விஜய் அலுவலகம் பக்கத்தில்.. திரிஷா மட்டும் இல்ல கீர்த்தி சுரேஷும்.. பிரபலம் சொன்ன தகவல்..

Vijay Keerthy Suresh Trisha Bayilvan Ranganathan
By Dhiviyarajan Jun 26, 2024 09:00 AM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

தற்போது விஜய், திரிஷா பற்றிய சர்ச்சைகள் தான் சமூக வலைத்தளங்களில் ஹாட் டாபிக்காக சென்று கொண்டு இருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு விஜய் தன்னுடைய 50வது பிறந்தநாளை கொண்டாடினார்.

அதற்கு திரை பிரபலங்கள் அரசியல்வாதிகளும் பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில் திரிஷா பதிவிட்ட ஒரு புகைப்படம் தான் சர்ச்சைகளுக்கு காரணமாக இருக்கிறது. ஏற்கனவே இவர்கள் இருவரை பற்றிய கிசுகிசு செய்திகள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் விஜய் திரிஷா விவகாரம் தொடர்பாக பேசியிருக்கிறார். அதில் அவர் பேசுகையில், விஜய்யின் அலுவலகத்தின் பக்கத்திலேயே திரிஷா வீடு வாங்கியிருக்கிறார்.திரிஷா மட்டும் இல்லை கீர்த்தி சுரேஷும் வாங்கியிருக்கிறார். ஆனால் அதற்கு விஜய் காரணம் கிடையாது. அதுமட்டுமின்றி விஜய் திரிஷா லிப்டில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படம்.

அதை ஒரு மூன்றாம் நபர்தான் எடுத்திருக்கிறார். உடனே அதை வைத்து பலரும் கதை கட்டுகிறார்கள். விஜய் அந்த மாதிரி ஆள் இல்லை. விஜய் அரசியல் கட்சி தொடங்கியதால் இப்படி தொடர்ந்து அவரை பற்றி தகவல்கள் வந்துகொண்டு இருக்கிறது என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். 

விஜய் அலுவலகம் பக்கத்தில்.. திரிஷா மட்டும் இல்ல கீர்த்தி சுரேஷும்.. பிரபலம் சொன்ன தகவல்.. | Bayilvan Speak Trisha Vijay And Keerthy Suresh