கோடி வசூலுக்காக குவாட்டர், பிரியாணி.. விமர்சனத்திற்காக கேவலமாக நடந்து கொண்ட தயாரிப்பாளர்

Karthi Suriya Bayilvan Ranganathan Viruman
By Edward Aug 17, 2022 06:15 AM GMT
Report

சினிமா நட்சத்திரங்களின் அந்தரங்க விசயங்களை அவதூறாக பேசி வருவதாக பல புகார்களை சந்தித்து வருபவர் நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்பான் ரங்கநாதன். சமீபத்தில் ப்ளூ சட்டை என்ற குறும்பட பிரஸ் மீட்டில் பேசிய பயில்வான் சமீபத்தில் வெளியான ஒரு படத்தின் வசூல் பற்றி சர்ச்சையாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசியலில் குவாட்டர் சரக்கு, பிரியாணி என கொடுத்து எப்படி ஓட்டுக்காக வாங்குவார்களோ, அதேபோல் சமீபத்தில் வெளியான தேசிய விருது தயாரிப்பாளரின் படத்திற்கு நடந்துள்ளது. மதுரையில் படம் வெளியான முந்தின நாளுக்கு குவாட்டர், பிரியாணி என்று வாங்கி கொடுத்து படத்தின் விமர்சனத்தை கூற வைக்கிறார்கள்.

அவர்களும் ஆஹா ஓஹோ என்று படத்தை புகழ்ந்து தள்ளுகிறார்கள் என்று கூறியுள்ளார். படத்தின் விமர்சனத்தை காசு கொடுத்து வாங்காதீர்கள் என்றும் தயாரிப்பாளர்களே 8 கோடி வசூல் 10 கோடி வசூல் என்று கூறி பார்ட்டியும் கொடுத்து வருகிறார்கள்.

இப்படி பேசியது சூர்யா, தன் தம்பி கார்த்தியை வைத்து தயாரித்துள்ள விருமன் படத்தை தான் இப்படி கூறியுள்ளாரா என்று நெட்டிசன்கள் கலாய்த்தும் வருகிறார்கள்.