நயன்தாராவுக்கு முன்பே இந்த விசயத்தை ஜெமினி கணேசன் மகள் ஆரம்பித்தார்.. பயில்வான் உண்மைகள்..
தமிழகத்தில் தற்போது பெரிய விமர்சனத்தில் சிக்கியிருக்கிறார் நடிகை நயன் தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி. திருமணமாகி 4 மாதமாகிய நிலையில் தம்பதியினர் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தையை பெற்றெடுத்து இதனை இணையத்தில் பகிர்ந்து அதிர்ச்சியை கொடுத்தனர்.
இந்த விசயம் பெரியளவில் பேசப்பட்டும் சட்டத்திற்கு எதிராக நயன் - விக்னேஷ் செயல்பட்டுள்ளனர் என்ற விமர்சனமும் எழுந்து வருகிறது. இவர்களுக்கு முன் பாலிவுட் நட்சத்திரங்கள் கூட வாடகைத்தாய் மூலம் குழந்தையை பெற்றெடுத்துள்ளனர் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், வாடகைத்தாய் மூலம் 20 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் நடந்துள்ளது. அதாவது தமிழகத்தில் காதல் மன்னன் நடிகர் ஜெமினி கணேசனின் மகள் கமலா செல்வராஜ்.
பிரபல மருத்துவராக இருந்து வரும் கமலா செல்வராஜ் செயற்கை குழாய் மூலம் குழந்தை பெறுவதை, 20 ஆண்டுகளுக்கு முன் டாக்டர் கலைஞர் ஆட்சியில் ஆரம்பித்து வைத்துள்ளாராம். இது தற்போது சாதாரணமாகிவிட்டது என்றும் பயில்வான் கூறியுள்ளார்.