புகழை பார்த்தபின் கசக்குதா.? புழந்து தள்ளிம் போது எங்க போனிங்க மேடம்! பயில்வான்.

radhika tamilcinema tamilactress baylvan
By Edward Apr 04, 2022 01:30 PM GMT
Report

சினிமாவில் நட்சத்திரங்களின் அந்தரங்க விஷயங்கள் மற்றும் தனிப்பட்ட விஷயங்கள் இணையத்தில் எப்படியாவது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தும். அதில் சில பத்திரிக்கையாளர்கள் ஆதாரத்துடன் இணையத்தில் லீக் செய்து விடுவார்கள்.

அப்படி தமிழ் சினிமாவின் நட்சத்திரங்களின் அந்தரங்க விஷயங்களை வெளிப்படையாக பயமில்லாமல் உண்மைகளை உடைத்து வருகிறார் நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன். சமீபத்தில் நடிகை ராதிகா தொடர்பான சில விஷயங்களை கூறி வருகிறார்.

இந்நிலையில் தன்னை ராதிகா பொது இடத்தில் கன்னத்தில் அடித்தாரா என்ற கேள்வி எழுந்து வந்துள்ளது. இதற்கு பதிலளித்த பயில்வான், தினமும் நான் என் ஓய்வு பெற்ற போலிஸ் நண்பர்களுடன் காலையில் நடைபெயற்சி செய்வேன். அப்போது என்னிடம் வந்த ராதிகா தகாதமுறையில் நடந்து திட்டினார். அதற்கு நான் நான் பேசியது தவறாக இருந்தால் என்மீது வழக்கு போடுங்கள் என்று அமைதியாக பதிலளித்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நான்கு திரைப்படங்கள் நடித்து பிரபலமடைந்தற்குப் பிறகு அந்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொன்னார்கள் என குற்றம் சாட்டுவார்கள். அப்படி குற்றம்சாட்டும் நடிகைகளிடம் எந்த ஒரு நியாயமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இவர்களும் அட்ஜஸ்ட்மெண்ட் செய்யாமல் இருந்து அவர்கள் மீது குறை சொன்னார்கள் என்றால், அது நியாயம். ஆனால் இவர்களும் அதற்கு ஒப்புக்கொண்டு பின்னர் குறை கூறி வருவது எந்த விதத்திலும் நியாயம் கிடையாது.

இதைதான் என்னுடைய வீடியோக்களில் நான் தெரிவித்து வருகிறேன். இதைப்பற்றி நான் சொன்னால் பயில்வான் எப்படி பேசுறாரு பாரேன் என்று என்மீது பாய்ந்து விடுகிறார்கள். நான் நடப்பதை மட்டுமே சொல்கிறேன் அதனால் எனக்கு எப்போதும் பயம் கிடையாது.

நடிகர்கள் நடிகைகளை பற்றி மட்டும் சொல்வதில்லை திரைத்துறையில் இருக்கும் அவலங்களைப் பற்றியும் நான் கூறி வருகிறேன். இதனால் எனக்கு யார் மீதும் எந்த ஒரு வெறுப்பும் கிடையாது. என்று பயில்வான் ரங்கநாதன் கடைசியில் கூறி முடித்துள்ளார்