தவானை அம்மாவுக்குகூட சொல்லாமல் ரம்யா பாண்டியன் திருமணம் செய்தாரா..பயில்வான் சொன்ன ஷாக்கிங் தகவல்..
ரம்யா பாண்டியன்
தமிழ் சினிமாவில் சில படங்களும், மலையாளத்தில் படங்கள் நடித்தும், தமிழ் சின்னத்திரையில் குக் வித் கோமாளி, பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் பங்குபெற்றும் பிரபலமானவர் தான் நடிகை ரம்யா பாண்டியன்.
இவருக்கு இன்று ரிஷிகேஷில் உள்ள கங்கை நதிக்கரையில் கோலாகலமாக யோகா பயிற்சியாளரான லவ்ல் தவானுடன் திருமணம் முடிந்துள்ளது.
தற்போது இந்த புதிய ஜோடியின் திருமண புகைப்படங்கள், வைரலானதை அடுத்து பயில்வான் ரங்கநாதன் சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
பயில்வான் ரங்கநாதன்
அதில் திருமணம் செய்து கொண்ட ரம்யா பாண்டியன், எப்படி தன்னிச்சையாக சினிமாவில் நடிக்கவேண்டும் என்ற முடிவில் வந்தாரோ, அதேபோல் தான் திருமண முடிவையும் யாரிடமும் கேட்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்திருக்கிறார்.
தனது அம்மா மற்றும் சகோதரியிடம் திருமணம் செய்ய இருப்பதாக ஒரு தகவலை கூறியிருக்கிறார். இதனால் யாரும் எதுவும் சொல்ல முடியவில்லை என்று ரம்யா பாண்டியனை விமர்சித்துள்ளார் பயில்வான் ரங்கநாதன்.