இந்த உடலை வெச்சுக்கிட்டா அனுஷ்காவுக்கு கல்யாணமே ஆகாது? வம்புக்கு இழுக்கும் பயில்வான்..

Anushka Shetty Bayilvan Ranganathan
By Edward Jul 02, 2022 07:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை அனுஷ்கா. தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த அனுஷ்கா செட்டி, ஹீரோ என்ற படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்திருப்பார். அப்படத்திற்காக அனுஷ்கா உடல் எடையை இரு மடங்கு ஏற்றி ஆள் அடையாளம் தெரியாதபடி மாறியிருப்பார்.

இப்படத்தில் ஏற்றி உடலை அதன்பின் குறைக்க கடுமையாக கஷ்டப்பட்டு வருகிறார். அதன்பின் ஓரளவிற்கு உடல் எடையை குறைத்து தான் பாகுபலி 2வில் நடித்தார். அப்போது கூட டெக்னாலிஜி மூலம் அனுஷ்காவை ஒல்லியாக காட்டினார்கள்.

இந்நிலையில் காதலும் செட்டாகவில்லை திருமணமும் படமும் செட்டாகவில்லை என்று தற்போது முழு வீச்சில் உடல் எடையை குறைத்து வருகிறாராம். 40 வயதை எட்டியும் திருமணமாகாமல் அனுஷ்கா இருக்க அவரது உடல் எடை அதிகமாக இருப்பதால் தான் கல்யாணம் ஆகவில்லை என்று பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.

அவர் உடல் எடையை பார்த்து யாரும் திருமணம் செய்து கொள்ள முன் வராமல் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார் பயில்வான். வயது மூத்தவர்களாக இருப்பவர்கள் கூட அனுஷ்காவை விட இளமையாக காணப்படுகிறார்கள் என்று வம்புக்கு இழுத்து பேசியுள்ளார் பயில்வான்.