அமீரை அசிங்கப்படுத்திய நடிகை பாவ்னியின் அக்கா? அந்த வேலைப் பார்க்கும் பிரபல தொலைக்காட்சி..
பிரபல தொலைக்காட்சி சீரியல் நடிகையாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர் நடிகை பாவ்னி ரெட்டி. சின்ன தம்பி சீரியலில் நடித்த பிறகு வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வந்தார்.

அமீர் - பாவ்னி காதல்
ஏற்கனவே திருமணமாகி கணவர் இறந்த நிலையில் அதிலிருந்து மீண்டும் சீரியல் பக்கம் நடிக்க ஆரம்பித்த பாவ்னி கடந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் 5 சீசனில் கலந்து கொண்டார். அனைத்து சீசன்களிலும் எதாவது ஒரு காதல் ஜோடி உருவாகுவார்கள். அப்படி உருவானவர்கள் தான் பாவ்னி - அமீர். வைல்ட் கார்ட் மூலம் நடன இயக்குனராக அறிமுகமாகி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமீர் கடைசி 5 இடத்தினை பிடித்து மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அமீர் பாவ்னியிடம் நெருக்கமாக பழகி சர்ச்சை வீடியோவிலும் சிக்கினார். அதன்பின் நிகழ்ச்சி முடிந்தும் எங்கு சென்றாலும் ஜோடியாகவே சென்றும் லைவ் சாட்டில் பேசியும் வந்தனர். தற்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருவரும் ஜோடிப்போட்டு நடனமாடி மக்களை கவர்ந்து வருகிறார்கள்.
அமீரை அசிங்கப்படுத்திய சகோதரி
வரும் வார எபிசோட்டில் பாவ்னியின் சகோதரிகள் நிகழ்ச்சிக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்திருந்தனர். அப்போது அமீர் - பாவ்னியின் உறவு மிகவும் பலமானதாக இருக்கிறது என்று புகழ்ந்து தள்ளியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது அமீரை பற்றி கேவளமாக விமர்சித்து பேசி அட்வைஸ் செய்திருந்தார் பாவ்னியின் சகோதரி.
வார்ட் பரிசு
தற்போது அப்படியே மாற்றி அமீரை புகழ்ந்து தள்ளியதோடு அவருக்கு வாட்ச்சையும் பரிசாக அளித்துள்ளனர். இதை பார்த்த பாவ்னி அந்த வாட்சை தன் கையால் அணியவைத்தார். இதனை பார்த்த நெட்டிசன்கள் எப்போ தான் காதலிக்கிறீர்ங்கன்னு ஒத்துக்க போறிங்க பாவ்னி என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.