T20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு இத்தனை கோடி ரொக்கத் தொகை பரிசு?

Indian Cricket Team Board of Control for Cricket in India Gautam Gambhir Suryakumar Yadav ICC Men
By Edward Mar 10, 2026 09:00 AM GMT
Report

உலகக் கோப்பை டி20

உலகக் கோப்பை டி20 தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது. இறுதி போட்டியில் இந்தியா - நியூஸிலாந்து அணிகள் அகமதாபாத்தின் நரேந்திர மோடி விளையாட்டு அரங்கில் மோதியது. முதலில் பேட் செய்த இந்திய அணி 255 ரன்கள் அடித்து நொறுக்கியது.

T20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு இத்தனை கோடி ரொக்கத் தொகை பரிசு? | Bcci Announces A Cash 131 Crore For Teamindia Wt20

இதனையடுத்து ஆடிய நியூஸிலாந்து அணி வீரர்கள் ஆரம்பத்தில் விறுவிறுப்பாக ஆடினாலும் 159 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் கொடுத்து தோல்வியடைந்தது.

96 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிப்பெற்று உலக கோப்பை டி20 கோப்பையை 3வது முறையாக கைப்பற்றி சாதனை படைத்தது. உலககோப்பையை கைப்பற்றிய இந்திய அணிக்கு ரூ. 21.5 கோடி பரிசாக கிடைத்துள்ளது. 2வது இடத்தை பிடித்த நியூஸிலாந்து அணிக்கு ரூ.10.75 கோடி வழங்கப்பட்டது.

T20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு இத்தனை கோடி ரொக்கத் தொகை பரிசு? | Bcci Announces A Cash 131 Crore For Teamindia Wt20

BCCI ரொக்கத் தொகை

இந்நிலையில் பிசிசிஐ சார்பில் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு, சிறப்புமிக்க சாதனைக்காக வீரர்கள் உள்ளிட்டோரை மீண்டும் ஒருமுறை வாழ்த்துவதோடு, எதிர்காலத்தில் தொடர்ந்து வெற்றிப்பெற வாழ்த்துக்கள் என்று கூறி, ரூ.131 கோடி ரொக்கத்தொகையை பரிசாக அளிக்கிறோம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.