அரபிக் கத்துட்டு இருக்கேன்! இனி ட்வீட் எல்லாம் அரபிதான்! பீஸ்ட் ட்ரோல்..

vijay nelson anirudh sivakarthikeyan beast arabickuthu kadhalardhinam
By Edward Feb 08, 2022 02:20 PM GMT
Report

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள பீஸ்ட் படம் வருகிற ஏப்ரல் 14ல் வெளியாகவுள்ளது. நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிய இப்படத்தின் முதல் பாடல் வரும் பிப்ரவரி 14 காதலர் தினத்திற்கு அனிரூத் யூடியூப்பில் வெளியிடவுள்ளார்.

அதற்காக அரபி குத்து பாடல் உருவாகி அதன் பிரமோ வீடியோவை நெல்சன் சிவகார்த்திகேயன் காமெடி கலந்தபடி வெளியிட்டனர். தற்போது 8 மில்லியன் பார்வையாளர்களை பெற்று ரசிகர்களை ஈர்த்து வருகிறது.  இப்பாடலுக்காக விஜய் ரசிகர்கள் எதிர்ப்பார்ப்புகளுடன் காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் அரபு மொழியில் உருவான இப்பாடல் காதல் பற்றியதாக இருக்கும் என்று பலர் யூகித்து வருகிறார். அப்படி இருக்கையில் பலர் படத்தின் அரபு கலாச்சார உடையை வைத்து கலாய்த்து ட்ரோல் செய்து வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGallery