காத்து வாங்கும் பீஸ்ட்! கேஎஃப்ஜி 2 படத்தால் துண்டை போட்ட சன் பிச்சர்ஸ்..
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் நடிப்பில் பீஸ்ட் படம் கடந்த 13 ஆம் தேதி வெளியாகியது. மிகுந்த எதிர்ப்பார்ப்புகள் வெளியாக பீஸ்ட் படம் விமர்சன ரீதியாக அடிவாங்கியது.
பீஸ்ட் முதல் நாள் மட்டுமே தமிழகம் முழுவதும் 40 கோடி அளவில் வசூல் சாதனை படைத்தது. இப்படத்தை தொடர்ந்து 14 ஆம் தேதி கேஜிஎஃப் 2 படம் உலகம் முழுவதும் வெளியாகியது. இப்படம் நல்ல வரவேற்பு பெற்றும் சிறப்பான விமர்சனத்தையும் மக்கள் மத்தியில் பெற்று வருகிறது.
முதல் நால் வசூலில் மொத்தம் 150 கொடிக்கும் மேல் உலகளவில் பெற்றுள்ளது. நேற்று வரையில் தியேட்டர் எண்ணிக்கையில் அதிகமாக இருந்த பீஸ்ட் படம் தற்போது கேஜிஎஃப் 2 படத்தால் காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளது.
200ல் இருந்து 250 தியேட்டர்கள் மட்டுமே முதல் நாளில் கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது 350க்கும் மேற்பட்ட திரையரங்குகள் இப்படத்திற்காக கிடைத்துள்ளதாம். இதனால் வசூல் ரீதியாக போட்ட பணத்தை பீஸ்ட் படக்குழு எடுக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதனால் சன் பிச்சர்ஸ் நிறுவனம் குழப்பத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறார்களாம்.
Blockbuster #KGFChapter2 pic.twitter.com/eTOQh8deU1
— Troll Vijay (@TrollVijay) April 14, 2022