பீஸ்ட் கொடுத்த மிகப்பெரிய அடி? அஜித்திடம் இந்த விஷயத்தில் தோற்றுப்போன விஜய்

ajith vijay boxoffice valimai beast
By Edward Apr 14, 2022 01:10 PM GMT
Report

பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று அனைவரால் தமிழ் சினிமாவில் தற்போது கூறப்படுபவர் நடிகர் விஜய். சர்கார் படத்தில் ஆரம்பித்து தற்போதுவரை அவர் கொடுத்த வசூல் வேட்டை இன்னும் யாராலும் தமிழ் சினிமாவில் முதல் நாளில் கொடுத்தது கிடையாது.

அப்படியிருக்கும் நிலையில் பீஸ்ட் படம் இந்த சாதனையை விஜய்யே முறியடித்திருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கான டிக்கெட் புக்கிங் சில இடங்களில் குறைவாக இருந்தாலும், பல இடங்களில் அதிக விலைக்கு விற்பட்டது.

ஆனால், அஜித்தின் வலிமை படத்திற்கு குறிப்பிட்ட தொகை மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது. இப்படியிருந்த நிலையில் வலிமை படம் தமிழகத்தில் முதல் நாள் ரூ. 33 கோடி வரை வசூல் செய்தது.

ஆனால், விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தின் டிக்கெட் விலை அதிகமாக வைத்து விற்க்கப்பட்டிருந்தாலும் கூட, தமிழகத்தில் முதல் நாள் வசூலில் வலிமை படத்தை ஓரிரு கோடிகள் வித்தியாசத்தில் பின்னுக்கு தள்ளியுள்ளது.

ஓரிரு கோடிகள் மட்டுமே வித்தியாசனம் உள்ள நிலையில், பீஸ்ட் படத்தை விட வலிமை படத்தின் ஆடியன்ஸ் கவுண்ட் அதிகம் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது. காசு அதிகமாக வசூலித்து டிக்கெட்டை விற்றிருப்பதை பலர் கிண்டல் செய்து வருகிறார்கள்.