என் படத்தையே ரீமேக் பன்ற அதுவும் என்னை வச்சு , நேரம் டா.. யோகிபாபு மைண்ட்வாய்ஸ்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய்யின் பீஸ்ட் படம் நெல்சன் இயக்கத்தில் வரும் ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தினை சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைத்து சமீபத்தில் இரு பாடல்கள் மிகப்பெரிய ஹிட்டானது.
இந்நிலையில் பீஸ்ட் படத்தின் டிரைலர் நேற்று வெளியாக 24 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. தற்போது டிரைலரை பாராட்டினாலும் சிலர் மீம்ஸ் போட்டும் இந்த படம் போல் இருக்கிறது என தவறுகளை சுட்டிக்காட்டி வருகிறார்கள்.
தற்போது யோகி பாபு நடித்த கூர்கா படத்தினை போல் இருக்கிறது என்று பலர் கூர்கா2 என்ற ஹாஷ்டேக்கினை பதிவிட்டு டிரெண்ட்டாக்கி வருகிறார்கள். என் படத்தையே ரீமேக் செஞ்சிட்டு என்ன வெச்சியே காமெடி பண்ற என்று கிண்டலும் செய்து வருகிறார்கள்.
எத்தன பேருக்கு இந்த படம் பிடிக்கும் #Gurkha #VijaySuper pic.twitter.com/NN7Ut4an3Q
— Vijay Super (@VijaySuperOffl) April 2, 2022



