அப்போ புரில இப்போ புரிது! பீஸ்ட் படத்தால் பறி போன மானம்! நெல்சனை வெச்சு செய்யும் விஜய் ரசிகர்கள்..
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவான படம் பீஸ்ட். பூஜா ஹெக்டே, செல்வராகவன், சதீஷ், விடிவி கணேஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து கடந்த ஏப்ரல் 13 ஆம்தேதி தியேட்டர்களில் வெளியாகியது.
சன்பிச்சர்ஸ் தயாரிப்பில் அனிரூத் இசையில் ரசிகர்களை கவர்ந்த பீஸ்ட் படம் கதை அளவில் திருப்திப்படுத்தாமல் ஏமாற்றத்தை கொடுத்தது. அதிலும் லாஜிக் எல்லாமல் பல காட்சிகள் அமைந்துள்ளதை நெட்டிசன்கள் கலாய்த்தும் வந்தனர்.
தற்போது படம் வெளியாகி ஒரு மாதமாகிய நிலையில் ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி ஒருவர் பல கேள்விகள் இந்த காட்சி மூலம் எழுகிறது என்று பீஸ்ட் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை ட்ரோல் செய்திருந்தார். அந்தவீடியோ இந்தியளவில் வைரலாகி பலரால் விமர்சிக்கபட்டது.
இதற்கெல்லாம் ஒரே காரணம் நெல்சன் இயக்கம் தான் என்று விஜய் ரசிகர்களே நெல்சனை திட்டியும் வந்தார்கள். மேலும் சூப்பர் ஸ்டாரை வைத்து இப்படி செஞ்சிடாதே என்றும் கோரிக்கைகளை முன்வைத்தும் வருகிறார்கள்.
வேண்டுமென்றே அவர் விஜய்யை வைத்து படத்தை இப்படி சொதப்பி விட்டதாக தளபதியின் ரசிகர்கள் நெல்சன் மீது தீராத கோபத்தில் சரமாரியாக திட்டி வருகிறார்கள். இதனால் படக்குழுவினர் அந்த வீடியோவை டெலிட் செய்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
மேலும் விஜய் படத்தில் இப்படியென்றால் பால்வுட் படத்தில் பல படங்கள் எல்லைமீறிய லாஜிக் காட்சிகள் அமைந்துள்ளது என்றும் அந்த வீடியோக்களை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி பழித்திர்த்து வருகிறார்கள்.

