பல நடிகைகளை அட்ஜெஸ்ட்மெண்டுக்கு அனுப்பி இருக்கேன்..உத்தம வேஷம் போடல!! பிரபலம்..
வித்தகன் சேகர்
சினிமாத்துறையில் நடக்கும் பல விஷயங்களை பகிர்ந்து வரும் PRO வித்தகன் சேகர், சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் நடிகைகளின் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி பகிர்ந்துள்ளார். அதில், நடிகைக்கு படவாய்ப்பை வாங்கித்தரக்கூடிய இடத்தில் இருக்கும் அனைவரும் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யக்கூடியவங்க தான். ஆனால் எந்தவிதமான அட்ஜெஸ்ட்மெண்ட்டும் கேட்காத கண்ணியமான ஆண்களும் இருக்கிறார்கள்.

அட்ஜெஸ்ட்மெண்ட்
என்னிடம் ஒரு நடிகை படவாய்ப்புக்காக அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யவும் ரெடி என்று சொன்னார். நானும் ஒரு இயக்குநரிடம் அவரை அனுப்பி வைத்தேன். இதுவும் பி ஆர் ஓ வேலை தான். ஆனால் நான் எந்த நடிகையிடமும் அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்டது இல்லை. நான் உத்தமன் வேஷம் போட விரும்பவில்லை.
அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு ஓகே சொன்ன நடிகைகளை அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்கும் இயக்குநர்களுக்கு அனுப்பி இருக்கிறேன். அப்படி நடித்த நடிகையின் படம் கூட கடந்த ஆண்டு வெளியானது.

நிறுத்திவிட்டேன்
இப்போது நான் எந்த நடிகையை அதற்கு அனுப்புவதை நிறுத்திவிட்டேன். அதற்கு காரணம் இப்படி நடிகைகள் எந்த திறமையும் இல்லாமல் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து வாய்ப்பை பெறுவதால் திறமையான நடிகைகளுக்கு வாய்ப்புகள் வருவதில்லை.
அதேபோல், அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து நடிக்கப்போன ஒரு நடிகை, சரியாக நடிக்கவில்லை என்று தயாரிப்பாளர் ஒருவர் என்னிடம் வருத்தப்பட்டார். இதனால், மனசாட்டி உறுத்தியதால் அந்த வேலையை செய்வதில்லை.
அப்படி பல நடிகைகள் அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு ஓகே சார் என்று கூறுபவர்களிடம், அப்படி செய்தால் வாய்ப்பு கிடைக்கும், ஆனால் சினிமாவில் நீடித்து நிலைக்க முடியாது, திறமை இருந்தால் தான் நிச்சயம் நல்ல வாய்ப்பு தேடி வரும் என்று அறிவுரை கூறுவதாக வித்தகன் சேகர் தெரிவித்துள்ளார்.
பொறுப்பு துறப்பு : இந்த செய்தியில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும் சினிமா விமர்சகர் வித்தகன் சேகர் சொன்னது மட்டுமே. விடுப்பு தளத்திற்கு அவரின் கருத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.