அந்த நடிகையுடன் லெஸ்பியன் ரோலில் நடிப்பேன்!! தனுஷ் பட நடிகை ஓபன் டாக்..
கிரித்தி சனோன்
தெலுங்கில் முன்னணி நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் 2014ல் வெளியான 1: Nenokkadine என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி அடுத்தடுத்த தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை கிரித்தி சனோன்.

தில்வாலே என்ற பாலிவுட் படத்தில் நடிக்க ஆரம்பித்த கிரித்தி, டாப் நடிகையாக மாறினார். பாலிவுட்டில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள தேரே இஷ்க் மே படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் கிரித்தி. படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு ரூ. 160 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்து வருகிறது.
லெஸ்பியன் ரோலில்
இப்படத்தினை தொடர்ந்து, கிரித்தி சனோன், அளித்த பழைய பேட்டியொன்று இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. அதில், ஒரு படத்தில் லெஸ்பியன் ரோலில் நடித்தால், எந்த நடிகைக்கு ஜோடியாக நடிப்பீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த கிரித்தி, தீபிகா படுகோனேவுடன் நடிப்பேன். ஏனென்றால், அவர் அழகாக இருப்பார், என்னை சரியாக வழிநடத்துவார். இருவரும் ஒரே உயரம், உடல் அமைப்பும் ஒன்றுதான் என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார் கிரித்தி சனோன்.
Need them together in a movie ❤️🔥 pic.twitter.com/qGuUbkVccz
— Deepika Supremacy (@slaypikaa) December 20, 2025