பீஸ்ட் படம் காப்பியே கிடையாது! புலம்பித் தள்ளும் இயக்குனர் நெல்சன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் நடிப்பில் பீஸ்ட் படம் ஏப்ரம் 13ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. நெல்சன் இயக்கத்தில் சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஆடியோ லான்ச் உள்ளிட்ட பல பிரமோஷன் வேலைகளை எதுவும் செய்யாமல் இருந்துள்ளனர்.
அதற்கு இணையாக விஜய்யை வைத்து ஒரு நேர்காணலை ஒளிப்பரப்பு செய்யவுள்ளது சன் தொலைக்காட்சி. விஜய்யுடன் நேருக்கு நேர் என பெயரிடப்பட்ட இந்த பேட்டியை இயக்குனர் நெல்சன் தான் தொகுப்பாளராக இருந்து கேள்விகளை கேட்டுள்ளார்.
அதன் பிரமோ வீடியோக்கள் இணையத்தில் வெளியிட்டு வரும் நிலையில் நெட்டிசன்கள் பீஸ்ட் படம் எந்த படத்தின் காப்பியும் கிடையாது என கூறியுள்ளார். ஹைஜாக் படங்கள் ஹாலிவுட் உட்பட பல படங்கள் வெளியாகியுள்ளது.
அப்படங்களில் துப்பாக்கி வைத்திருப்பதால் அதுபோல தான் இருக்கிறது என்று கூறுவது சரியாக இல்லை. கண்டிப்பாக பீஸ்ட் படம் விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது பல தரப்பினரையும் கவரும் என்றார். மேலும் இப்படத்தில் முஸ்லிம் தீவிரவாதிகள் இடம்பெற்றது போன்ற காட்சிகள் பீஸ்ட் ட்ரெய்லரில் அமைந்துள்ளது.
யார் மனதையும் புண்படுத்தும் வகையில் இத்திரைப்படம் கட்டாயம் இருக்காது என்றும், தங்கள் நாட்டில் இருக்கும் மக்களுக்கு காண்பிக்கப்படும் படங்களில் தீவிரவாதம் போன்ற காட்சிகள் இடம்பெற்ற படங்களை ரிலீஸ் செய்யக் கூடாது என்பதில் குவைத் அரசு திட்டவட்டமா இருக்கிறது.
ஸ்ட் திரைப்படம் 10 வெர்ஷனை கட் செய்ததற்கு பின்னர் தான் இந்தப் படத்தின் அவுட் வெளியானது எனவும் தெரிவித்துள்ளார் நெல்சன்.