ஒரு டிக்கெட் இத்தனை ரூபாயா? பீஸ்ட் வசூலை அள்ள சன் பிச்சர்ஸ் நிறுவனர் போட்ட பிளான்!

vijay nelson sunpictures beast
By Edward Apr 12, 2022 10:28 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் நாளை தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.

படத்தின் எதிர்ப்பார்ப்புகளை விட வசூலில் சாதனை படைக்க வேண்டும் என்ற கர்வத்துடனும் இருக்கிறார்களாம். அதற்காக காலை 4 மணி காட்சிகளுக்கான டிக்கட்டுகளும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு டிக்கெட்டின் விலை சுமார் 1500க்கும் மேல் விற்கப்படுகிறதாம்.

இந்நிலையில் பீஸ்ட் படம் தமிழ் புத்தாண்டுக்கு முன்பாக வெளியாகவுள்ள நிலையில் அடுத்த 4 நாட்கள் தொடர் விடுமுறையை அரசு அறிவித்திருக்கிறதாம்.

பீஸ்ட் வசூலை எப்படியாவது மூட்டையை அள்ள வேண்டும் என்பதற்காக 14 ஆம்தேதி புத்தாண்டு, 15 புனித வெள்ளி, 16 சனிக்கிழமைக்கு அரசு விடுமுறை அறிவுப்பு, 17 ஞாயிறு மற்றும் ஈஸ்டர் பண்டிகை என அடுத்தடுத்த விடுமுறையால் வசூலில் மிரளவிடப்போகிறதாம்.

அப்படி இந்த விடுமுறைகள் இல்லாவிட்டாலும் சர்கார்-ன் சாதனையை முறியடித்துவிடுமாம். சென்னை மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் மட்டும் 1280 காட்சிகள் முதல் நாளில் 101 தியேட்டர்களில் ஒளிப்பரப்பு செய்யவுள்ளனர். முன்பதிவில் மட்டும் இதுவரை 7 கோடியே 18 லட்ச ரூபாய் வசூலித்துள்ளது.