பீஸ்ட் விஜய்யால் திரை தீப்பிடித்ததா? குளிர்ச்சியானதா? பரிதாப விமர்சனம்..

vijay nelson poojahegde beast beastreview beastpublicopinion
By Edward Apr 13, 2022 05:40 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகிய படம் பீஸ்ட். இப்படத்தினை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிரூத் இசையமைத்துள்ளார்.

பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், விடிவி கணேஷ், யோகிபாபு உள்ளிட்ட பல கலைஞர்கள் நடித்துள்ளனர். பெரும் எதிர்ப்பார்ப்புகளுடன் இப்படம் தியேட்டர்களில் வெளியாகி ஆராவாரத்துடன் துவங்கியுள்ளது.

இப்படத்துக்கான முதல் இரண்டு காட்சிகள் முடிந்து ரசிகர்கள் படம் எப்படி இருக்கிறது என்று கூறி வருகிறார்கள். ஒருசில எதிமறை விமர்சனங்களையும் கூறி வருகிறார். இதுதொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வைரலாகியும் வருகிறது. விஜய் ஆக்ஷன் காட்சிகளில் இருந்து சற்று மாறுபட்ட்ட காட்சிகளில் நடித்து மிரட்ட வருகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.

காஷ்மீர் தீவிரவாதிகளை சிறைப்பிடிக்க அவர்களை துவம்சம் செய்து மீட்டுகிறார். மால் ஹைஜாக்கில் வீரராகவனும் இருக்கிறார். ஒரே வேலையில் பூஜாவுடன் சுற்றி வரும் வீரா ராகவன் வேலை சம்மந்தனாக மாலுக்கு வருகிறார். அங்கு திடீரென தீவிரவாதிகள் மாலில் உள்ள மக்களை சிறை பிடிக்கின்றனர்.

வீரா ராகவனால் கைதான அந்த முக்கிய புள்ளியை விடுவிக்க கோரிக்கை வைகின்றனர். வீரா ராகவானாக தனது அசால்ட்டான நடிப்பு, டயலாக் டெலிவரி, டான்ஸ், ஆக்ஷன் காட்சிகள் என ஒட்டுமொத்த படத்தையும் தாங்கி நிறுகிறார் விஜய்.

யோகி பாபு, Redin Kingsley- க்கு அதிகமான காட்சிகள் இல்லை, மத்த கதாபாத்திரங்கள் பெரிதாக சொல்லிக்கொள்ளும் அளவு இல்லை. படத்தில் தீவரவாதிகளை ரொம்பவே Weak-ஆக காண்பித்துள்ளார்கள்.

எந்தவொரு விறுவிறுப்பான காட்சிகளும் இப்படத்தில் சுத்தமாக இல்லை என்று தான் கூற முடிகிறது. மேலும் டாக்டர் படத்தில் இருக்கும் அளவிற்கு மற்ற நடிகர்களுக்கு எந்த ஸ்கோப்புல் இல்லை. 

மொத்தத்தில் விஜய் பீஸ்ட், நெல்சன் வொர்ஸ்ட். திரை தீப்பிடிக்கவில்லை, ரசிகர்களின் மனமும் தீப்பிடிக்கவில்லை. கடைசியில் தியேட்டர் தான் தீப்பிடித்தது.