விஜய்யை கலாய்க்கும் கேப்பில் அஜித்தை ஓட்டிய ப்ளூ சட்டை மாறன்! இவருக்கு வேற வேலையே இல்லயா?

ajith nelson bluesattaimaran beast beastreview
By Edward Apr 14, 2022 08:15 AM GMT
Report

தமிழ் சினிமாவில் எந்த படங்கள் வெளியாகினாலும் அதற்கான விமர்சனங்களை யூடியூப் மூலம் பல வெளியிட்டு வருகிறார்கள்.அதில் சில படத்தை விமர்சனம் செய்வதென்று கூறி நடிகர்களின் உடல் மற்றும் மற்ற விஷயங்களை விமர்சனம் செய்து சர்ச்சையில் சிக்குவார்கள்.

அதில் பெரியளவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருபவர் ப்ளூ சட்டை மாறன். சமீபத்தில் நடிகர் அஜித் குமாரின் வலிமை படத்தினை விமர்சிப்பதாக கூறி அஜித்தின் உடல் பற்றியும் நடனம் பற்றியும் கலாய்த்து பேசியது அஜித் ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியது.

தற்போது விஜய்யின் பீஸ்ட் விமர்சனம் செய்து விஜய்யையும் கலாய்த்து விமர்சனம் செய்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். இடையில், நல்ல நடனமாடும் விஜய்க்கெல்லாம் 2 சாங் தான் வைக்கிறாங்க, ஆடத்தெரியாதவர்களுக்கு 5, 6 சாங் வெக்குறாங்களே என்று பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.