20 வருஷமா டான்ஸ் ஆடுற? மறைமுகமாக அஜித்தை தாக்கிய இயக்குனர் நெல்சன்..

vijay nelson anirudh sunpictures beast JollyOGymkhana redinkingle
By Edward Mar 19, 2022 07:41 AM GMT
Report

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பீஸ்ட். இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள நிலையில் அப்படத்தின் முதல் பாடல் அரபிக் குத்து அனிருத் இசையில் மிகப்பெரிய சாதனையை பெற்றுள்ள வருகிறது.

இந்நிலையில் பீஸ்ட் படத்தின் இரண்டாம் பாடல் மார்ச் 19ல் வெளியாகவுள்ளது என்று பிரமோ வீடியோ சில நாட்களுக்கு முன் வெளியாகியது. பீஸ்ட் படத்தில் நடித்த நட்சத்திரங்கள் இப்பாடலில் வருவதாக எடுக்கப்பட்ட அப்பிரமோ வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் அந்த வீடியோவில் நெல்சன் ரெடின் கிங்ஸ்லேவை பார்த்து 20 வருஷமான டான்ஸ் ஆடுறனு ஆடுற என்று கலாய்த்திருப்பார். இதை மறைமுகமாக அஜித்தினை கலாய்க்கும் படியாக இருக்கிறது என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.