ஊரே வெள்ளத்துல மிதக்குது! இதுல பீஸ்ட் செட் என்ன ஆனா என்ன..
இயக்குனர் நெல்சன் 'டாக்டர்' படத்திற்கு பிறகு நடிகர் விஜய்யை வைத்து இயக்கும் படம் தான் 'பீஸ்ட்'. படத்தில் விஜய்யிற்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டெ, வில்லனாக இயக்குனர் செல்வராகவன், மற்ற கதாபாத்திரங்களில் யோகி பாபு, VTV கணேஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் எடுக்கப்பட்டு முடிவடைந்துள்ள நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக சென்னையில் பிரம்மாண்டமாக செட்கள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.
இந்நிலையில் அண்மையில் சென்னையில் பெய்த பெருமழையால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்திருக்கிறது. படப்பிடிப்பிற்காக அமைக்கப்பட்ட செட்களும் பாதிக்கப்பட்டு முழுவதும் வெள்ளநீரால் சூழ்ந்து கிடக்கிறது.
இதன் தொடர்ச்சியாக படப்பிடிப்பும் தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது . தற்போது பீஸ்ட் பட செட்டின் புகைப்படம் ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
actress @Samanthaprabhu2 via Instagram Story , #Beast Shopping Mall set ?#Master @actorvijay #Thalapathy66 pic.twitter.com/uwWX4c5qyX
— ??? ?????? ?????????? ???? (@aktf__official) November 11, 2021