தமிழ்நாட்டில் கேஜிஎஃப்-ஆல் தலையில் துண்டைப்போட்ட பீஸ்ட்! விஜய்க்கே இந்த நிலைமையா?
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்து வருபவர் நடிகர் விஜய். மாஸ்டர் படத்திற்கு நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். பெரும் எதிர்ப்பார்ப்புகளுடன் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
தமிழகம் உட்பட உலகம் முழுவதும் மொத்தம் 800 தியேட்டருக்கும் மேல் பீஸ்ட் படம் ஒளிப்பாரப்பாகவுள்ளது. இந்நிலையில் பிரபல கோயம்பேடு ரோகினி தியேட்டர் 13 ஆம் தேதி மட்டும் பீஸ்ட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பல ஷோக்கள் ஒதுக்கியுள்ளது.
ஆனால் அடுத்த நாள் கேஜிஎஃப் 2-விற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதாம். பீஸ்ட் படத்திற்கு இரண்டாம் நாள் (14 ஆம் தேதி) 22 ஷோக்களும், KGF 2விற்கு 27 ஷோக்களும் ரோகினி தியேட்டர் ஒதுக்கியுள்ளது.
சென்னையின் முக்கிய தியேட்டரே இப்படி பீஸ்ட் படத்தினை ஒதுக்குவதை பலர் கிண்டல் செய்து வருகிறார்கள். இதனால் வசூல் ரீதியாக பீஸ்ட் படம் அடிவாங்கவிருக்கிறதாம்.