பீஸ்ட் உண்மை கதையா? விஜய்யை வெச்சு இப்படி உருட்டு உருட்டுட்டியே நெல்சா
நடிகர் விஜய் நடிப்பில் நேற்று வெளியான படம் பீஸ்ட். நெல்சன் இயக்கத்தில் சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படம் மிகப்பெரியளவில் தமிழகத்தில் 800க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீஸானது. படம் வெளியாகி எதிர்மறை விமர்சனங்களை பெற்றாலும் நடிகை விஜய்யின் நடிப்பால் வசூல் ரீதியாக முதல் நாளில் நல்ல வெற்றியை பெற்றது.
ஆர்மபத்தில் படம் கூர்கா போன்ற படங்கள் மாதிரி இருக்கிறது என்று விமர்சித்து கலாய்த்து வந்தனர். சமீபத்தில் நெல்சன் இப்படம் உண்மை கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது என்று கூறியிருந்தார்.
ஷாப்பிங் மாலினை ஹைஜாக் செய்யப்பட்டவர்களை விஜய் எப்படி காப்பாற்றுகிறார் என்பதே கதை. தீவிரவாதிகள் சம்மந்தப்பட்ட பல படங்கள் வெளியாகினார்லும் விஜய்யின் முது எதார்த்தமான நடிப்பு அனைவரை ஈர்க்க வைத்து வருகிறது.
இந்த படத்தின் தழுவல் உண்மை சம்பவமானது இந்தியாவின் ஒரு விமானத்தில் நடந்ததாம். தீவிரவாதிகளால் கடப்பட்ட மக்களை பணயமாக வைத்து பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தலைவனை விடுவிக்க கோரி நடந்த சம்பவம் தான். மக்களை காப்பாற்ற இந்திய அரசு வேறுவழியின்றி தீவிரவாதியை விடுவித்தார்களாம்.
இதைதான் பீஸ்ட் படத்தில் இயக்குனர் நெல்சன் காட்சியாக அமைத்துள்ளார். ஆனால் மக்கள் மத்தியில் எந்தவொரு நல்ல விமர்சனத்தை பெறாமலே ஏமாந்துவிட்டார் நெல்சன் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.