பீஸ்ட் முதல்நாள் 40 கோடி அல்லுமா? விலையை ஏத்தினா ஒரே வாரத்தில் 100 கோடி தான்

vijay boxoffice nelson tamilcinema sunpictures beast
By Edward Apr 08, 2022 06:10 PM GMT
Report

நடிகர் விஜய் நடிப்பில் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது பீஸ்ட் படம். நெல்சன் இயக்கத்தில் சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இன்னும் சில நாட்களில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் பிரமோஷன் விஷயங்கள் கடந்த இரு மாதங்களுக்கு முன்பே ஆரம்பித்து விட்டார்கள் படக்குழு. அப்படி அரபிக் குத்து, ஜாலியா ஓ ஜிம்கானா பாடல்கள், பீஸ்ட் டிரைலர் என இணையத்தில் ரசிகர்கள் தெறிக்கவிட்டு வருகிறார்கள்.

தற்போது படத்தின் மூன்றாம் சிங்கிள் பாடலான பீஸ்ட் மோட் சாங்க் இணையத்தில் வெளியாகி அதிரவைத்து வருகிறது. இந்நிலையில் படத்தின் முதல் நாளில் நள்ளிரவு 1 மணி ஷோ இன்னும் உறுதியாகாத நிலையில் காலை 4 மணி உள்ளிட்ட அதன்பின் உள்ள ஷோக்களுக்கான டிக்கெட்டுகள் ஆரம்பித்துள்ளார்கள்.

ஒரே நாளில் இதுவரை இருக்கும் வசூல் சாதனைகளை விட 40 கோடி கலெக்ஷன் பெற்று சாதனை படைக்கும் பீஸ்ட் என்று ரசிகர்கள் உற்சாகத்துடன் கூறி வருகிறார்கள்.

இதனை நெட்டிசன்கள் பலர் 40 கோடி என்ன தியேட்டர் டிக்கெட் விலையை 1000, 2000-ம்னு வித்தா 100 கோடியே வசூலிக்கலாம்ல என்று கிண்டல் செய்தும் வருகிறார்கள். அதையும் ஒரு சில இடத்தில் ஆரம்பித்தும் விட்டார்களாம்.

GalleryGallery