பிரீமியம் லார்ஜ்-னா என்னங்கையா? பீஸ்ட் டிரைலரை கலாய்க்க ஆரம்பித்த ஹேட்டர்ஸ்..
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்து வரும் நடிகர் விஜய் மாஸ்டர் படத்திற்கு பிறகு நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். பொங்கல் கழித்து வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் கொரோனா தொற்று காரணமாக தற்போது ஏப்ரல் 13 ஆம் தேதி தள்ளிப்போகியுள்ளது.
படத்தின் மீது ரசிகர்கள் அதிகளவில் எதிர்ப்பார்ப்பை தூண்டும் விதமாக அரபிக்குத்து, ஜாலி ஓ ஜிம்கானா பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சில காரணங்களால் தடை செய்துள்ள பீஸ்ட் குழு மீது ரசிகர்கள் மிகுந்தை சங்கடத்தில் இருந்து வந்தனர்.
இதனால் சில தினங்களுக்கு முன் முதுகில் குத்திய நெல்சன், சன் பிக்சர்ஸ் என்று ஹாஸ்டேக்கினை வைரலாக்கினர். தற்போது IMAX தியேட்டரில் திரையின் தரத்தினை அதிகரித்து மாலை 6 மணிக்கு டிரைலரை வெளியிடவுள்ளார்கள் படக்குழு.
இதனை வைத்து பலர் அப்படி பிரீமியம் லார்ஜ் என்றால் என்ன என்று குழம்பி இணையத்தில் கேள்வி கேட்டு மீம் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.