சாகுறதுக்கு முன்னாடி வடிவேலு-வ பாக்கணும் ஆசைப்பட்டார்.. விஜயகாந்த் குறித்து பேசிய நடிகர் பெஞ்சமின்
வடிவேலு உடன் இணைத்து நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் பெஞ்சமின், இவர் விஜய்யுடன் திருப்பாச்சி படத்தில் லீட் ரோலில் நடித்து இருப்பார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பெஞ்சமின், "சினிமாவிற்கு வந்த ஆரம்பத்தில் சாப்பிட காசு இருக்காது, அந்த நேரங்களில் விஜயகாந்த் சார் ஆபிஸ் தான் போவோம். நல்ல மனுஷன். வெக்கத்தை விட்டு சொல்லுறேன், கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் அங்க தான் சாப்பிட்டேன்".

"என்னுடைய தங்கைக்கு அவர் கல்யாணம் பண்ணி வைத்தார். அந்த மாதிரியான மனித தெய்வத்தை பார்க்கமுடியாது.. சில ஆண்டுகளாக விஜயகாந்த் சுயநினைவில் இல்லை. அவர் மட்டும் பழைய மாதிரி இருந்தா இந்நேரம் போண்டாமணிக்கு எந்த தேவையோ அதை செய்து இருப்பார். விஜயகாந்த் எல்லாம் சொத்தையும் வித்து மக்களுக்கு உதவி செய்தார்".
மேலும் அவர் பேசுகையில், "போண்டாமணி இறப்புக்கு கூட வடிவேலு வரல, அதுமட்டுமின்றி எந்த ஒரு உதவி செய்யவில்லை. போண்டாமணி வடிவேலுவை பார்க்க ஆசைப்பட்டார். போண்டாமணி வடிவேலு கிட்ட இருந்த காசு எதிர்பார்க்கவில்லை. அவரு கிட்ட இருந்து காசுக்காக கை ஏந்தி நிற்கமாட்டார்" என்று பெஞ்சமின் கூறியுள்ளார்.