முகேஷ் அம்பானிக்கு மாசமாசம் 40.5 லட்சம் வாடகை கொடுக்கும் டாப் 5 பணக்காரர்!! யாரு தெரியுமா?
முகேஷ் அம்பானி
பிரம்மாண்டத்திற்கு பேர் போன கோடிஸ்வரர்களிலேயே உலகம் வியந்து பார்க்க கூடியவர் தான் முகேஷ் அம்பானி. ரூ. 9280 லட்சம் கோடிக்கு மேல் சொத்து வைத்திருக்கும் அம்பானி, தன்னுடைய பிள்ளைகளின் திருமணத்தை உலகமே அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு நடத்தி முடிப்பார்.
அம்பானியின் மகன் அனந்த் அம்பானி - ராதிகா திருமணத்திற்கு பின், அவர்கள் பற்றிய சிறு செய்திகள் கூட வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து முகேஷ் அம்பானியின் 27 மாடிகள் கொண்ட அண்டிலியா வீட்டின் மாத கரண்ட் பில் 70 லட்சம் ரூபாய் என்ற தகவலும் பரவியது.
வாடகை கொடுக்கும் டாப் 5 பணக்காரர்
இந்நிலையில், முகேஷ் அம்பானியை விட பல படங்கு சொத்து மதிப்பு கொண்ட ஒரு நபர் மாதம்தோறும் 40.5 லட்சம் ரூபாய் வாடகையாக செலுத்தி வருகிறாராம். லூயிஸ் விட்டான் நிறுவனத்தின் உரிமையாளரும் தலைமை செயலதிகாரியுமான பெர்னார்ட் அர்னால்ட், உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் 5 இடங்களில் இருப்பார். சர்வதேச அளவில் ஆடம்பர பொருட்களுக்கான சந்தையில் மிகவும் பிரபலமானவர் தான் இவர். அவரின் மொத்த சொத்து மதிப்பு 168.8 பில்லியன் அமெரிக்க டாலராகும்.
94.9 பில்லியன் டாலர் மதிப்புள்ள முகேஷ் அம்பானிக்கு மாதம் மாதம் 40 லட்சம் ரூபாய் வாடகை கொடுத்து வருகிறாராம். முகேஷ் அம்பானியின் மும்பையில் இருக்கும் ஜியோ வேர்ல்ட் பிளாசா மாலில் பல நிறுவனங்களின் விற்பனை செயல்பட்டு வருகிறது.
இந்த மாலில் லூயிஸ் விட்டன் நிறுவனம் 7465 சதுர அடி பரப்பளவில் ஒரு கடையை நிறுவியுள்ளது. அதன் வாடகைக்கு தான் முகேஷ் அம்பானிக்கு பெர்னார்ட் அர்னால்ட் 40.5 லட்சம் ரூபாய் வாடகை கொடுத்து வருகிறாராம். ஜியோ வேர்ல்ட் பிளாசா மாலில் மாதம்தோறும் கோடிக்கணக்கிலான பணம் வாடகைக்கு மட்டுமே வருமானமாக கிடைத்து வருகிறதாம்.