புகைத்தபடி கவிஞர் வாலியை காக்கவைத்து கோபப்படுத்திய பாக்யராஜ்.. இவர் படம் என்றால் அப்படித்தானாம்..

Bhagyaraj Gossip Today
By Edward Sep 06, 2022 05:32 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பல ஆயிரம் பாடல்களுக்கு வரிகள் எழுதி அனைவரையும் கவர்ந்திழுத்து வந்தவர் கவிஞர் வாலி. எம் எஸ் வி முதல் அனிருத் வரை நான்கு தலைமுறைக்கு பாடல் வரிகளை எழுதிய பெருமை வாலிக்கு உண்டு. அப்படிப்பட்ட மனிதரை காக்கவைத்து கடுப்பாக்கியுள்ளார் இயக்குனர் பாக்யராஜ்.

புகைத்தபடி கவிஞர் வாலியை காக்கவைத்து கோபப்படுத்திய பாக்யராஜ்.. இவர் படம் என்றால் அப்படித்தானாம்.. | Bhagyaraj Always Hated Vaali The Reason Behind

நடிப்பு, இயக்கம் தாண்டி பாடலை கம்போஸ் செய்தும் வந்தார் பாக்யராஜ். அப்படி ஒரு படத்திற்காக பாக்யராஜ் வீட்டில் வரிகள் எழுதியிருக்கிறார் கவிஞர் வாலி. பாடலை எழுதி பாக்யராஜிடம் கொடுத்துவிட்டு அங்கே சாப்பிட்டு இருக்கிறார்.

பின் வந்து பார்த்தால் புகையை புகைத்தபடியே வரிகளை சரிப்பார்த்துக் கொண்டிருந்தார். அமர்ந்தபடி உறங்கி எழுந்தும் அப்படியே அந்த பல்லவியை பார்த்துக்கொண்டே இருப்பார்.

பொறுமை இழந்து கடுப்பாகி என்ன செய்வதென்று இருந்தேன் என்று வாலி சில வருடங்களுக்கு முன் கூறியிருந்தார்.

பெரும்பாலும் பாடல்வரிகள் எதிர்ப்பார்த்தபடி பாக்யராஜுக்கு இருந்தால் சம்பளத்தை அதிகப்படியாக கொடுப்பது அவரின் பழக்கம் என்றும் அந்த பொறுமைக்கு இதுதான் காரணம் என்று வாலி குறிப்பிட்டும் இருக்கிறார்.