பாக்யராஜின் குருநாதர் பாரதிராஜா கிடையாதா? இவர் இல்லனா அவர் கிடையாது?

bharathiraja tamilcinema kbhagyaraj gramakrishna thuyavan
By Edward Mar 20, 2022 09:05 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் தற்போது ஜாம்பவனாக இருக்க காரணமாக இருந்தவர் இயக்குன் பாரதிராஜா. தற்போது இருக்கும் இயக்குனர்கள் இவரின் ஆசியில் பல நட்சத்திரங்கள் சினிமாவில் அறிமுகமாகி டாப் இடத்திற்கு வந்துள்ளனர். பாரதிராஜா செதுக்கிய சிற்பத்தின் ஒரு ஆளாக இருப்பவர் இயக்குன் பாக்யராஜ்.

16 வயதினிலே படத்தில் பாரதிராஜாவுக்கு உதவி இயக்குனராக பணியாற்றியவர் பாக்யராஜ். ஆனால் பாக்யராஜை முதன்முதலில் அறிமுகப்படுத்தியது பாரதிராஜா இல்லையாம். பிரபல இயக்குனர் ஜி. ராமகிருஷ்ணா தான் பாக்யராஜை பாரதிராஜாவிடம் அறிமுகப்படுத்தினாராம்.

அதற்கு முன் பாக்யராஜ், ஜி. ராமகிருஷ்ணாவுடன் பணியாற்றி இருக்கிறார் என்று இயக்குனர் சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார். கதையாசிரியர் தூயவன் ஜி ராமகிருஷ்ணனுக்கும் கதையை எழுத்தி கொடுத்து வந்துள்ளார்.

அப்போது தூயவனால் ஜி ராமகிருஷ்ணனிடம் அனுப்பட்டு பாக்யராஜ் எழுதிய வசனம் பிடித்து போக அவர் படத்தில் முதன் முதலாக பணியாற்றினார் பாக்யராஜ்.

ஆனால் அப்படம் சில காரணங்களால் படப்பிடிப்பு நின்று போய் தோல்வியில் முடிந்தது. அதன்பின் பாலகுரு, ஜி ராமகிருஷ்ணன் மூலம் பாரதிராஜாவிடம் அனுப்பட்டுள்ளார் பாக்யராஜா.