திருமணமாகி 2 வருடத்தில் முதல் மனைவி மரணம்! வைரலாகும் இயக்குநர் பாக்யராஜின் கல்யாண புகைப்படம்..

K Bhagyaraj poornima Bhagyaraj praveena
By Edward Aug 12, 2021 01:00 PM GMT
Report

சினிமாவில் தனக்கென ஒரு பாணியில் படங்களை இயக்கி வெற்றி பெரும் நடிகர்களில் தமிழ் சினிமாவில் இருந்தவர் பாக்யராஜ். இவர் எடுத்த பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியும் பெற்றது. தற்போது குணச்சித்திர கதாபாத்திரத்தில் ஒருசில படங்களில் நடித்தும் வருகிறார்.

பாக்யராஜ் தன் படத்தில் நடித்த நடிகையான பிரவீனாவை 1981ல் காதலித்து திருமணம்செய்து கொண்டார். 2 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு பிரவீனா 1983ல் மஞ்சள் காமாலையால் இறந்துள்ளார்.

இதையடுத்து, அடுத்த ஆண்டே நடிகை பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவரது முதல் மனைவி பிரவினாவை சிவாஜி மற்றும் எம்ஜிஆர் முன்னிலையில் திருமணம் செய்த புகைப்படம் வைரலாகியுள்ளது.

திருமணமாகி 2 வருடத்தில் முதல் மனைவி மரணம்! வைரலாகும் இயக்குநர் பாக்யராஜின் கல்யாண புகைப்படம்.. | Bhagyaraj First Wife Praveena Marriage